வெளிநாட்டில் எரிந்த நிலையில் காருக்குள் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணின் குழந்தை: கணவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
வெளிநாட்டில் தன் மகனுடன் வாழ்ந்து வந்த ஒரு பிரித்தானியப் பெண், கணவனுடன் அனுப்பி வைத்த குழந்தை வீடு திரும்பாததால், பொலிசில் புகாரளித்திருந்தார்.
ஃபேஷன் உலகில் பிரபலமானவரான Phoebe Arnold என்னும் பிரித்தானியப் பெண் ஒருவரும், பிரபல டிசைனரான Clemens Weisshaar (40) என்னும் ஜேர்மானியரான அவரது கணவரும் கடந்த ஜூலையில் பிரிந்த நிலையில், Clemens நீண்ட நாட்களாக தன் மகனான Tasso (3)ஐப் பார்க்காமலே இருந்திருக்கிறார். கணவனும் மனைவியும் போர்ச்சுகல்லில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
இந்நிலையில், முன்னாள் மனைவியை சந்தித்த Clemens, மகனை தன்னுடன் அனுப்புமாறும், நவம்பர் 1 அன்று அவனைத் திரும்ப அழைத்து வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் சொன்னபடி மகனை அழைத்துவராததால், மகனைக் காணவில்லை என பொலிசாரிடம் புகாரளித்திருக்கிறார் அந்த பெண்.
பொலிசார் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று காலை மோப்ப நாய்களுடன் சென்ற சிலர், Santa Margarida da Serra என்ற மலைப்பகுதியில், எரிந்த கார் ஒன்றிற்குள் குழந்தை Tasso உயிழந்து கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதிச்சியளிக்கும் விதமாக, சற்று தொலைவில், Tassoவின் தந்தையான Clemensம் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
பொலிசார் அவர்கள் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்கள். இருவரும் உயிரிழந்து மூன்று நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மகனைப் பிரிய மனதில்லாததால், Clemens அவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். விசாரணை தொடர்கிறது.