இரு நாடுகளில் குழப்பத்தை உருவாக்கிய இராட்சத பலூன் விவகாரம்: மர்மம் விலகியது
மர்ம பலூன் ஒன்று தங்கள் வான்வெளியில் பறப்பதாக அமெரிக்காவும் கனடாவும் தெரிவித்திருந்த நிலையில், அந்த பலூன் குறித்த மர்மம் விலகியுள்ளது.
வானில் பறந்த இராட்சத பலூன்
தங்கள் வான்வெளியில் மூன்று பேருந்துகள் அளவுடைய இராட்சத பலூன் ஒன்று பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்ததுடன், அது சீன உளவு பலூனாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
அதேபோல பலூன் ஒன்றைத் தாங்களும் கண்டுபிடித்திருப்பதாக கனடாவும் கூறிய நிலையில், கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பான NORAD, அந்த பலூனை கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.
Image: CHASE DOAK/AFP via Getty Images
மர்மம் விலகியது
இப்படி ஒரு பலூன் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பலூன் குறித்த மர்மம் விலகியுள்ளது.
ஆம், அமெரிக்கா சந்தேகப்பட்டதுபோலவே அது சீன பலூன்தான். அந்த பலூன் தங்களுடையதுதான் என ஒப்புக்கொண்டுள்ள சீனா, அது ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என கூறியுள்ளது.
Image: Getty Images
வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் அந்த பலூன் பலத்த காற்று காரணமாக திட்டமிட்ட பாதையைத் தாண்டி வேறு நாடுகளின் வான்வெளிகளுக்குள் பறந்துவிட்டதாகவும், மற்ற நாடுகளின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழையும் நோக்கம் தங்களுக்கு இல்லயென்றும், தவறுதலாக அந்த பலூன் அமெரிக்க வான்வெளியில் நுழைந்ததற்காக வருந்துவதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Mao Ning தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது குறித்து ஆரம்பத்தில் திட்டமிட்ட அமெரிக்கா, பின்பு அந்த பலூனின் உடைந்த பாகங்கள் அமெரிக்கா மீதே விழலாம் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images