விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்கள்: எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி
தைவான் நாட்டில் விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தியபோது, அவர்கள் பெரும் அளவில் போதைப்பொருட்களை கடத்திவந்தது எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி
தாய்லாந்து நாட்டிலிருந்து தைவான் நாட்டிலுள்ள Kaohsiung சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு பெண்களை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளார்கள்.
அவர்களை எக்ஸ்ரே சோதனைக்குட்படுத்தியபோது, அவர்கள் உடலுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண்ணின் உடலுக்குள் 54 கேப்சூல்களும் மற்ற பெண்ணின் உடலுக்குள் 61 கேப்சூல்களும் இருந்துள்ளன.
அந்தப் பெண்களுக்கு தங்கள் உடலுக்குள் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

அந்தப் பெண்கள், வெறும் 745 பவுண்டுகளுக்காக அபாயகரமான வகையில் அந்த போதைப்பொருளைக் கடத்த உதவியுள்ளார்கள்.
மொழிபெயர்ப்பாளர், அவர்கள் உடலில் முறையே 390.93 மற்றும் 273.07 கிராம் போதைப்பொருள் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவர்கள் பயந்து நடுங்கியுள்ளார்கள்.

உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடன் அந்த கேப்சூல்களை கைப்பற்றியுள்ளார்கள்.
அந்தப் பெண்கள் சிறிய அளவிலான கேப்சூல்களை விழுங்கியுள்ளார்கள். பெரிய கேப்சூல்களை அவர்கள் தங்கள் ஆசனவாய் வழியாகவும், சில கேப்சூல்களை பெண்ணுறுப்புக்குள்ளும் மறைத்து கொண்டுவந்துள்ளார்கள்.
அவர்கள் கடத்தி வந்த போதைப்பொருளின் மதிப்பு 200,000 பவுண்டுகள் ஆகும். கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |