காதலர்களை பிரிக்கும் Breakup அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேவை: மாதம் ரூ. 2.8 லட்சம் சம்பளம்
காதலர்களை பிரித்து விட்டால் ரூ.2.8 லட்சம் சம்பளத்துடன் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலர்களை பிரித்து விட்டால் ரூ. 2.8 லட்சம்
அமெரிக்காவை சேர்ந்த டேட்டிங் தளமான டேட்டிங்.காம் என்ற இணைய தளத்திற்கான Breakup அதிகாரி பதவிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த Breakup அதிகாரி பதவிக்கான மாத சம்பளம் ரூ. 2.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வேலையில் சேருவதற்கான தகுதி மற்றும் நிபந்தனையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டேட்டிங்.காம் நிறுவனத்தின் நிபந்தனைகள் படி, இந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் குறைந்தது 3 காதல் தோல்விகளை சந்தித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின் தன்மை
இந்த வேலையின் முக்கிய பணி என்னவென்றால், உறவில் உள்ள இருவருக்கும் இடையே உள்ள உறவு சிக்கலை புரிய வைத்து அவர்களை சுமுகமாகவும், தெளிவாகவும், பிரச்சனை இன்றியும் பிரிய வைக்க வேண்டும் என்பதே ஆகும்.
உறவில் இணைவது எப்படி முக்கியமானதோ, அப்படியே சுமுகமாக உறவில் இருந்து பிரிவதும் முக்கியமானது. உலக அளவில் 84% பேர் உறவை எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி அப்படியே விட்டுச் செல்வதாக தெரிவித்துள்ளது.
முறையான பிரிவு கிடைக்காமல் பலர் மெளனத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக நல்ல முறையில் உறவை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் தளத்தின் நோக்கம் என்று அந்த தளத்தில் பணிபுரியும் ஜெய்மி பிரான்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |