தாய்ப் பால் கொடுக்கும் தாய்... அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்டார்
அமெரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னுடைய அக்குலில் இருந்து பால் சுரக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளது, சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் Minnesota-வை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் என்று கூறப்படும் பெண் ஒருவர் தன்னுடைய டிக் டாக்கில் கடந்த மாதம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 191,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதில் அவர் என்னை போன்று பெண்கள் சிலரால் செய்ய முடியும், அப்படி செய்ய முடிந்தால், என்னுடன் சேர்ந்த இந்த வீடியோவை டிக்டாக்கில் Duet ஆக பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய அக்குல்களில் இருந்து பாலை வெளியேற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதை அவர் செய்தும் காட்டியுள்ளார்.
குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் இதை நிச்சயம் செய்ய முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மார்பக திசுக்கள் அக்குள்களில் உருவாகக்கூடிய கட்டிகள் அல்லது வீக்கம் என்று இதை கூறுவர்.
பொதுவாகவே உங்கள் அக்குள்களில் மார்பக திசு உள்ளது, நீங்கள் ஈடுபடும்போது, சில நேரங்களில் அந்த திசு வீங்கும், என்று குறிப்பிடும் அவர், எனக்கு நடந்த அல்லது தெரிந்த ஒரு நிகழ்வை உங்களுக்கு செய்து காட்டுகிறேன்.
இது பார்ப்பதற்கு வெறுக்கத்தனமாக இருக்கலாம், இருப்பினும் நான் அதை நிரூபிக்கப்போகிறேன் என்று குறிப்பிட்டு, தன்னுடைய அக்குள்களில் இருந்து அழுத்துவதன் மூலம் பால் வெளியேறுவதை பார்க்க முடிகிறது.