அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்துநொறுக்கி முதல் சதமடித்த பிரீட்ஸ்கி
Matthew breetze 112 runs vs australia: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 297 ஓட்டங்கள் குவித்தது.
மேத்யூ பிரீட்ஸ்கி சதம் விளாச, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் குவித்தது.
மேத்யூ பிரீட்ஸ்கி
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டர்பனின் கிங்ஸ்மீட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது.
ஸோர்ஸி டக்அவுட் ஆக, டி காக் 14 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் டெம்பா பவுமா 30 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜென்சன் அதிரடி
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி (Matthew Breetze) 106 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் விளாசினார்.

மார்கோ ஜென்சன் (Marco Jansen) 59 பந்துகளில் 75 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாச, தென் ஆப்பிரிக்க அணி 297 ஓட்டங்கள் குவித்தது.
நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசல்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

