முதல் சர்வதேச போட்டியிலேயே 150 ரன்! கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ ப்ரீட்ஸ்கீ சதம் விளாசி சாதனை படைத்தார்.
மேத்யூ ப்ரீட்ஸ்கீ
பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 6 விக்கெட்டு 304 ஓட்டங்கள் குவித்தது.
அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ (Matthew Breetzke) 148 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் விளாசினார்.
வரலாற்றில் முதல் வீரர்
வியான் முல்டர் 64 ஓட்டங்களும், ஜேசன் ஸ்மித் 41 ஓட்டங்களும் எடுத்தனர். ஹென்றி, ரூர்க்கே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
26 வயதான மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், முதல் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.
இதற்கு முன், 1978ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் 148 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |