அதை துண்டு துண்டாக உடைத்தேன்: 487 நாட்களுக்கு பின் வாணவேடிக்கை சதம் விளாசிய ரோஹித் ஷர்மா
இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா நீண்ட நாட்களுக்கு பின் சதம் விளாசியது குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா சதம் விளாசல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 90 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசியாக 2023ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்த ரோஹித் ஷர்மா, அதன் பின்னர் பல போட்டிகளில் சொதப்பினார்.
ROHIT SHARMA 119 VS ENGLAND BALL BY BALL INNINGS ❤️.pic.twitter.com/Ju8bXjfIW2
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) February 10, 2025
அதை உடைத்தேன்
இந்த நிலையில்தான் நேற்றையப் போட்டியில் சதம் விளாசி காம்பேக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நான் எப்படி துடுப்பாட விரும்பினேன் என்பது பற்றி நான் அதை துண்டு துண்டாக உடைத்தேன். இது 50 ஓவர் பார்மேட். டி20 பார்மேட்டை விட சற்று நீளமானது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட சற்று குறைவானது என்பது தெளிவாகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டை விட மிகக் குறைவு - ஆனால் நீங்கள் அதை இன்னும் பிரித்து, வழக்கமான இடைவெளியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மதிப்பிட வேண்டும். அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒரு துடுப்பாட்ட வீரருக்கு இது முக்கியமானது. முடிந்தவரை ஆழமாக துடுப்பாட்டம் செய்ய வேண்டும். அதுதான் எனது கவனம்" என தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 267 போட்டிகளில் 32 சதங்கள், 57 அரைசதங்களுடன் 10,987 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது தனிநபர் அதிகபட்சம் 264 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |