அவுஸ்திரேலிய மண்ணில் புதிய வரலாறு படைத்த 26 வயது வீரர்
தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
மார்க்ரம் 82 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாடி வருகிறது.
ரிக்கெல்டன் 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 81 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் வந்த மேத்யூ பிரீட்ஸ்கி அபாரமாக ஆடி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பிரீட்ஸ்கி சாதனை
இதன்மூலம் தொடர்ச்சியாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் அரைசதம் கடந்த 3வது வீரர் எனும் சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து (இந்தியா), மேக்ஸ் ஓ'தவுத் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர்.
மொத்தம் 56 பந்துகளில் எதிர்கொண்ட மேத்யூ பிரீட்ஸ்கி (Matthew Breetzke) ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |