தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த டிரம்ப்: கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய சரிவு
ஈரான் போர் தொடர்பில் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளது.
டிரம்பின் அறிவிப்பு
ஈரான்-அமெரிக்கா இடையே தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்து வந்த நிலையில், ஈரான் மீதான இரண்டாவது நாள் தாக்குதலை கைவிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அத்துடன் ஈரானுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூக ஊடகத்தில், ஈரானிய இஸ்லாமிய குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானின் உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இன்று மாலை ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள் ரத்து செய்யப்படுகிறது என பதிவிட்டு இருந்தார்.
கச்சா எண்ணெய் விலை சரிவு
டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரெண்ட்(Brent) கச்சா எண்ணெயின் விலை 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

நேற்று இரவில் இருந்து பிரெண்ட்(Brent) கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை 90 டொலருக்கும் குறைவான விலையில் வர்த்தம் செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்த விலை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 88.17 டொலராக பதிவாகி கவனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்கா - ஈரான் மோதலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 17ம் திகதி பிறகு கச்சா எண்ணெயின் விலை இவ்வளவு சரிந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சமீபத்திய விலை சரிவுகள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தாலும், போருக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய் விலை இன்னும் உயர்வாக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போருக்கு முன்னதாக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை 72 டொலருக்கு விற்பனையாகி வந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |