ஒரேயொரு வெற்றியுடன் 19வது இடம்: படுமோசமான நிலையில் மான்செஸ்டர் யுனைடெட்
Brentford beat man utd by 4-0 goals: பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ப்ரெண்ட்ஃபோர்ட் அணியிடம் படுதோல்வியடைந்தது.
ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்த போட்டியில், ப்ரெண்ட்ஃபோர்ட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.
கேல்லம் வில்சன்
மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ப்ரெண்ட்ஃபோர்ட் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 19வது மற்றும் 32வது நிமிடங்களில் ப்ரெண்ட்ஃபோர்ட் கேல்லம் வில்சன் (Callum Wilson) கோல்கள் அடித்தார்.
அதன் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சற்று நெருக்கடி கொடுக்க, ப்ரெண்ட்ஃபோர்ட் அணி மூன்றாவது கோலினை அடிக்க 50 நிமிடங்கள் ஆனது.
மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
கிறிஸ்டோஃபெர் அஜேர் 82வது நிமிடத்தில் கோல் அடிக்க, கெவின் ஸ்சாட் 90+1வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இறுதிவரை மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியாததால், ப்ரெண்ட்ஃபோர்ட் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2026-07 சீஸனில் ப்ரெண்ட்ஃபோர்ட் அணி 5வது இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒரு வெற்றியுடன் 19வது இடத்திலும் உள்ளன.
