பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் தெளிவற்றது..! பிரான்ஸின் முக்கிய மேயர் எச்சரிக்கை
இறுதிசெய்யப்பட்ட பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மையை குறித்து பிரான்ஸின் முக்கிய வடக்கு மீன்பிடி துறைமுக நகரமான Boulogne-sur-Mer-ன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என நேற்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிட் ஒப்பந்தத்தில் இன்னும் பலவற்றை பிரான்ஸ் மீனவர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது என Boulogne-sur-Mer நகர மேயர் Frederic Cuvillier தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் மிகவும் தெளிவற்றதாக இருந்தது. எங்கள் மீனவர்களுக்கான நிவாரணம், பங்குகளில் என்ன பாதிப்பு ஏற்படும்? உதாரணமாக, கட்டுப்பாடுகளை யார் கையாள்வார்கள்? எப்போது வரை? என Frederic Cuvillier கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய ஒரே உறுதி என்னவென்றால், மாற்றம் காலத்தின் போது, கூடுதலான ஒப்பந்தங்களை நாம் கண்டறிய வேண்டும் என மேயர் Frederic Cuvillier தெரிவித்துள்ளார்.