எர்லிங் ஹாலண்ட் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்
Manchester city beat sunderland: பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 5-3 என்ற கோல் கணக்கில் சன்டர்லேண்ட் அணியை வீழ்த்தியது.
எத்திஹாத் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில், சன்டர்லேண்ட் வீரர் ஹாட்ரிக் கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணிக்கு 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் போட்டி
மான்செஸ்டர் சிட்டி மற்றும் சன்டர்லேண்ட் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி எத்திஹாத் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். அடுத்த 3 நிமிடங்களில் சன்டர்லேண்ட் வீரர் பிரையன் ப்ரோபிபே பதிலடி கோல் அடித்தார்.
பின்னர் மான்செஸ்டரின் சிட்டியின் ரயன் செர்கி 29வது நிமிடத்தில், 33வது நிமிடத்தில் பிரையன் ப்ரோபிபே இரண்டாவது கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பிரையன் ப்ரோபிபே ஹாட்ரிக்
அதனைத் தொடர்ந்து, மான்செஸ்டரின் அன்டோய்ன் செமென்யோ 43 மற்றும் 57வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரையன் ப்ரோபிபே ஹாட்ரிக் (Brian Brobbey) கோல் அடித்தார்.
மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) 81வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
