ரோகித்தின் தலைமை மாறியதால் ஹர்திக்கிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு! கிண்டலடித்த ஜாம்பவான்
ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினால் தான் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமை
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பொறுப்பு ரோகித் ஷர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு கைமாறியது.
இது ரோகித் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்த, தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ஹர்திக் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
கிண்டலடித்த லாரா
இந்தியாவில் ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிராக இப்படி கூச்சலிடுவதை நான் கேட்டதில்லை என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறினார்.
அதன் பின்னர் ஹர்திக் ரசிகர்களை இங்கே கவர என்ன செய்ய வேண்டும் என இயன் பிஷப் கேட்க அதற்கு பிரையன் லாரா கிண்டலாக பதிலளித்தார்.
அவர், ''அடுத்த முறை இங்கே விளையாடும்போது இந்தியாவுக்காக விளையாடுங்கள் ஹர்திக்'' என்றார். அதாவது காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் வந்து விளையாடுவதை பலரும் விமர்சித்தனர். தற்போது லாராவும் அதையே கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |