ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை கடுமையாக சாடிய BRICS நாடுகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில், கூட்டமைப்பின் ஆதரவை ஈரான் வென்றது.
சர்வதேச சட்டத்தை மீறும் செயல்
இராணுவம், அணுசக்தி மற்றும் பிற வசதிகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களை BRICS நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஜூன் 13 முதல் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை கண்டிப்பதாகவும், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் தலைவர்கள் ஒருமனதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், 22 மாதங்களாக நீடிக்கும் காஸா போருக்கு விரைவான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். மேலும், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் மொத்தமாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் அதிகரித்ததை அடுத்தே, BRICS நாடுகளின் அறிக்கை வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் தொடுத்த தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் முன்னெடுத்த முழு வீச்சிலான தாக்குதலில் இதுவரை 57,418 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும், ஈரானின் நட்பு நாடான ரஷ்யாவும் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |