புதுமணத் தம்பதிகளுக்கு உருளைக்கிழங்கு வரவேற்பு: திக்குமுக்காடி போன உறவினர்கள்: புகைப்படம்
சமீபத்தில் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமணத்தில் கான்பெட்டிக்குப் பதிலாக துருவிய உருளைக்கிழங்கு தூள்களை பயன்படுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணத்தில் துருவிய உருளைக்கிழங்கு
சமூக ஊடகத்தில் வெளியான பதிவு மூலம் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், ஒரு புதுமணத் திருமண தம்பதிகள் தேவாலயத்தை விட்டு வெளியேறும் போது, விருந்தினர்கள் சிலர் கான்ஃபெட்டிக்குப்(கலர் பேப்பர் பட்டாசுகள்) பதிலாக துருவிய உருளைக்கிழங்கு பொடியை பொழிந்து அவர்களை வரவேற்றனர்.
Getty Images/iStockphoto
இந்த சம்பவம் தொடர்பாக அந்த கொண்டாட்டத்தில் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்த ஒருவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், மணமக்கள் வண்ணத் தாள்கள் அல்லது பூ துண்டுகளுக்கு பதிலாக துருவிய உருளைக்கிழங்கு பொடியை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக வெளிப்படுத்தினார்.
அத்துடன் இந்த துருவிய உருளைக்கிழங்கு துகள்கள் எல்லா இடங்களிலும் சென்றதுடன் மட்டுமல்லாமல், விருந்தினர்களின் முடி, உடைகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றிலும் கலந்தது என்று எழுதியிருந்தார்.
Reddit/JohnDeLancieAnon
இந்த வித்தியாசமான முயற்சியால் சில விருந்தினர்கள் குழப்பமடைந்ததுடன், உருளைக்கிழங்கு துருவல் வியர்வையுடன் கலந்து வாந்தியை தூண்டும் வாசத்தை வெளிப்படுத்தியதால் சிலர் அதிர்ச்சியடைந்து முற்றிலுமாக வெறுப்படைந்தனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது
இந்த பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள பார்வையாளர்கள் பலர், தங்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Getty Images
அதில் ஒருவர், கான்ஃபெட்டிக்கு(confetti) பதிலாக உருளைக்கிழங்கு துருவல் "வினோதமானது," மற்றும் "அருவருப்பானது" என்று தெரிவித்துள்ளார்.
சிலர் செலவைக் குறைக்கும் ஹேக்கை பாராட்டியதுடன், “உருளைக்கிழங்கு காகிதம் போல் சுத்தம் செய்யப்பட வேண்டியதில்லை, அவை வனவிலங்குகளுக்கு பாதுகாப்பானவை, மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது" என்று விளக்கினார்.