250 பலூன்களில் பறந்து வந்த மணப்பெண்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருமண மேடைக்கு 250 பலூன்களில் பறந்து வந்த மணப்பெண் குறித்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் நண்பர்கள் விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் முக்கியமான தருணமாக மணப்பெண் திருமண மேடைக்கு உள்நுழையும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.
மேலும் இந்த மணப்பெண் நுழைவை வித்தியமான முறையில் செயல்படுத்தும் முயற்சியில் திருமண வீட்டுக்காரர் எப்போதுமே முயல்வது வழக்கம், அந்தவகையில் இத்தாலியின் புளோரன்ஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் மணப்பெண்ணை சுமார் 250 பலூன்களால் கட்டி பறக்கவிட்டு உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வானத்து தேவதையை வியந்து பார்ப்பது போல் செய்துள்ளனர்.
சுமார் 250 பலூன்களில் ஹீலியம் காற்றை நிரப்பி அதனுடன் மணப்பெண்ணையும் இணைத்து கட்டி, விழா மேடையில் இசை கச்சேரி நடக்க, நண்பர்கள் நடனமாட வெள்ளை திருமண உடையில் பறந்து வந்து மணப்பெண் இறங்கியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
ரஷ்யா மீது விதிக்கப்படும் தடை ஒருதலைப்பட்சமானது: சீனா ஜனாதிபதி கருத்து!