ரஷ்யா மீது விதிக்கப்படும் தடை ஒருதலைப்பட்சமானது: சீனா ஜனாதிபதி கருத்து!
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை எதிர்ப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தெற்கு பகுதியான ஹைனான் தீவில் நடைபெற்ற வருடாந்திர போவோ மன்றத்தின் கூட்டத்தில் வீடியோ வாயிலாக உரையாற்றிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடை ஒருதலைப் பட்சமானது மற்றும் மேலாதிக்கமானது என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மீது செலுத்தப்படும் தீவிர அழுத்தம் மற்றும் விநியோகத்தை தடைசெய்வது போன்றவை பயனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பின் பிரிக்க முடியாத கொள்கையை நிலைநிறுத்தும் உலகளாவிய பாதுகாப்பு முயற்சியை சீனா முன்வைக்க விரும்புவதாகவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய படையெடுப்பு நடவடிக்கை என சீனா ஆரம்பம் முதலே அழைக்க மறுப்பு தெரிவித்த வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கைகளை சீனா மறைமுகமாக இந்த கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரினால் "நெருக்கடிக்குள் நெருக்கடி" உலக வங்கி எச்சரிக்கை!