மாப்பிள்ளைக்கு ரூ.1.2 லட்சம் மாத சம்பளம் இருந்தும் அரசு வேலை இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
மாப்பிள்ளைக்கு ரூ.1.2 லட்சம் மாத சம்பளம் இருந்தும் அரசு வேலை இல்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த இன்ஜினீயருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதில், மாப்பிள்ளைக்கு ரூ.1.2 லட்சம் மாத சம்பளம் என்று இடைத்தரகர் கூறியுள்ளார். மேலும், மாப்பிள்ளை அரசு வேலையில் இருக்கிறார் என்ற காரணத்தினால் மட்டுமே மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் மாப்பிள்ளை, அரசு இன்ஜினியர் இல்லை என்பதும், தனியார் இன்ஜினியர் என்பதும் மனப்பென்னிற்கு தெரியவந்தது.
பின்னர், மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பிறகு, மாலை மாற்றும்போது மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, இரு வீட்டாரும் சமாதானம் செய்ய முயன்றும் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். மேலும், நிறுவனத்திற்கு அவசரமாக போன் செய்து சம்பள ரசீதை பெற்று மாப்பிள்ளை காண்பித்துள்ளார்.
ஆனால், இறுதியில் மணப்பெண் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, இரு வீட்டாரும் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவை பகிர்ந்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |