திருமணம் முடிந்த கையோடு மணமகளின் துரோகத்தை போட்டு உடைத்த மணமகன்: அதிர்ந்த உறவினர்கள்
தனது மணமகளும், தன் மாப்பிள்ளைத் தோழனும் தவறான உறவு வைத்திருக்கும் காட்சிகளை திருமண நாளன்றே குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார் ஒரு மணமகன்.
நல்ல முறையில் நடந்து முடிந்த திருமணம்
பிரித்தானியர் ஒருவர், தனது மணமகளுக்கும், தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக நிற்கவிருக்கும் தன் நண்பனுக்கும் இடையில் தவறான உறவு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
Image: Getty Images/iStockphoto
தான் அவ்வளவு நம்பிக்கை வைத்த இருவரும் தனக்கு துரோகம் செய்ததை அறிந்த மணமகன், சரியான நேரம் பார்த்து மணமகளை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டார். அதன்படி, நல்ல முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் சாப்பிட்டு முடிந்ததும், மணமகன் உரைக்காக காத்திருக்கிறார்கள்.
போட்டு உடைத்த மணமகன்
அப்போது எழுந்த மணமகன், அனைவருக்கும் வணக்கம் கூறி, நண்பர்களே, உறவினர்களே, இப்போது உணவு பரிமாறுபவர்கள் உங்களிடம் ஒரு கவரைக் கொண்டு வருவார்கள்.
Image: Getty Images/iStockphoto
அவற்றை இப்போது அனைவரும் பிரித்துப் பார்க்கலாம் என்று கூற, திருமணத்துக்கு வந்தவர்கள், மணமகன் ஏதோ சர்ப்ரைஸ் வைத்துள்ளார் என்று நினைத்து கவர்களை பிரித்திருக்கிறார்கள்.
மணமகனோ, நண்பர்களே, நீங்கள் பார்ப்பது, என் மணமகளும், என் மாப்பிள்ளைத் தோழனும் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் என்று கூற, திருமணத்துக்கு வந்தவர்கள் அந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.
Image: Getty Images/iStockphoto
மணமகன் ஏற்கனவே தன் குடும்பத்தினரிடம் இந்த விடயம் குறித்து கூறியிருக்கிறார். ஆகவே, மணமகனும் அவரது குடும்பத்தினரும் எழுந்து நடையைக் கட்ட, மணமகளும், அந்த மாப்பிள்ளைத் தோழனும் அவமானத்தில் குறுகிப்போய் நின்றிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, உணவுக்கும் மணமகன் பணம் செலுத்தவில்லையாம். ஆக, அவமானப்பட்டதுடன், உணவு மற்றும் பிற செலவுகளுக்கு பணமும் கொடுக்கவேண்டிய நிலைக்கும் ஆளாகியிருக்கிறார் அந்தப் பெண்!