முதலிரவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை காலையில் விபரீத முடிவு.. மணப்பெண் அதிர்ச்சி
தமிழக மாவட்டம், செங்கல்பட்டு அருகே முதலிரவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவர் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே சமயம், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகள் ஸ்வேதா (எ) ராஜராஜேஸ்வரி.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
புது மாப்பிள்ளை தற்கொலை
இதனைத்தொடர்ந்து, இருவரும் மணப்பெண்ணின் வீடான திம்மாவரத்திற்கு வந்தனர். அங்கு, இவர்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருவரும் அறைக்கு சென்றனர்.
அப்போது, காலையில் மணப்பெண்ணான ராஜராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது சரவணன் தூக்கில் தொங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கூச்சலிட்டுள்ளார்.
பின்பு, உறவினர்கள் வந்து பார்த்த போது சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது. பின்பு, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்று சரவணனின் மனைவி ராஜேஸ்வரி, மாமனார், மாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |