மேக்ரானை அலட்சியம் செய்த மனைவி: வில்லியம் கேட் தம்பதியருடன் ஒப்பிடும் ஊடகங்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா வந்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக அவரது மனைவி அவரை அவமதிக்க, ஊடகங்கள் மேக்ரான் தம்பதியருடன் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரை ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
இரண்டாவது முறை மேக்ரானை அவமதித்த பிரிஜிட்
ஏற்கனவே மேக்ரானை பிரிஜிட் அறைந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், மீண்டும் அவரை அலட்சியம் செய்தார் பிரிஜிட் மேக்ரான்.
விமானத்திலிருந்து இறங்கிய மேக்ரான், தன் மனைவிக்காக கையை நீட்டிக்கொண்டு காத்திருக்க, அவரோ கணவருக்கு கை கொடுக்காமல் படிக்கட்டுகளைப் பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கும் காட்சி ஒன்று வெளியாகி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த காட்சி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் மக்கள் பிரிஜிட்டை மோசமாக விமர்சித்துவருகிறார்கள்.
வில்லியம் கேட் தம்பதியருடன் ஒப்பிடும் ஊடகங்கள்
இந்நிலையில், பிரித்தானியா வந்துள்ள மேக்ரான் தம்பதியரை வரவேற்கும் பொறுப்பு பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான வில்லியம் மற்றும் இளவரசை கேட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரிஜிட் தன் கணவரை அவமதித்த அதே நேரத்தில், இளவரசி கேட் தன் கணவரை அன்புடன் அணைத்துக்கொள்ளும் காட்சிகளையும், படியில் இறங்கும் தன் மனைவிக்கு கரம்பிடித்து உதவி செய்யும் வில்லியமைக் காட்டும் புகைப்படங்களையும் வெளியிட்டு மேக்ரான் தம்பதியருடன் வில்லியம் கேட் தம்பதியரை ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டுவருகின்றன ஊடகங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |