சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகள்... ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கெத்து காட்டிய வீராங்கனை: கொண்டாட்டத்தில் குட்டி நாடு
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜூடோ போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார் கொசவோ நாட்டைச் சேர்ந்த தீஸ்திரியா க்ராஸ்னிக் (Distria Krasniqi).
உலக அரங்கில் தங்கள் நாட்டின் தேசியக் கொடி உயரப் பறந்ததை கண்டு அவர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
செர்பியாவின் ஆளுகைக்கு கீழ் இருந்த இந்த நாடு 2008ல் சுதந்திர காற்றை சுவாசித்தது. ரஷ்யா, செர்பியா உள்ளிட்ட நாடுகள் கொசவோ-வை ஒருநாடாக அங்கீகரிக்க இன்றளவும் மறுக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை கொசவோ இரண்டு தங்கம் வென்றுள்ளது. எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்காமல் வெறும் கையோடு திரும்பும் சூழலில்,
சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகளேயான கொசவோ நாட்டு வீராங்கனைகள் அடுத்தடுத்த போட்டிகளில் தங்கத்தை தட்டி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் கொசவோ நாடு பங்கேற்றது. ஜூடோ போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் மஜ்லிந்தா கேல்மந்தி என்பவர் கொசவோ நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தீஸ்திரியா க்ராஸ்னிக் மற்றும் Nora Gjakova ஆகியோர் ஜூடோ போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.