Big Bash லீக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றிய பிரிஸ்பேன் ஹீட்!
சிட்னியில் நடந்த Big Bash லீக் இறுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஜோஷ் பிரவுன் அதிரடி
Big Bash லீக் தொடரின் இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியில், தொடக்க வீரர் பியர்சன் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மெக்ஸ்வீனி நிதானமாக ஆட, ஜோஷ் பிரவுன் அதிரடியில் மிரட்டினார்.
அணியின் ஸ்கோர் 90 ஆக உயர்ந்தபோது மெக்ஸ்வீனி 33 (32) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அரைசதம் விளாசிய ஜோஷ் பிரவுன் 53 (38) ஓட்டங்களில் ஓ கீஃபே ஓவரில் அவுட்டானார்.
6️⃣ 6️⃣ 4️⃣
— KFC Big Bash League (@BBL) January 24, 2024
Brown is flying at the SCG! ? #BBL13 pic.twitter.com/OMGRtM8rSW
சியான் அபோட் 4 விக்கெட்
பின்னர் மேக்ஸ் பிரையன்ட் மற்றும் ரென்ஷா இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.
ரென்ஷா 22 பந்துகளில் 40 ஓட்டங்களும், பிரையன்ட் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். சியான் அபோட் 4 விக்கெட்டுகளும், ஓ கீஃபே மற்றும் ட்வர்ஷுய்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
✅ Peirson
— KFC Big Bash League (@BBL) January 24, 2024
✅ Bryant
✅ Walter
✅ Neser
Four poles for Sabba! #BBL13 pic.twitter.com/UNOppvHG31
பிரிஸ்பேன் ஹீட் சாம்பியன்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, ஸ்பென்ஸர் ஜான்சன் பந்துவீச்சில் சரிவுக்குள்ளானது.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஹென்ரியூஸ் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகளும், பார்ட்லெட் மற்றும் ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
This is your moment, @HeatBBL. Champions of #BBL13 ? pic.twitter.com/43FmAwd1X0
— KFC Big Bash League (@BBL) January 24, 2024
இதன்மூலம் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
They brought the HEAT ?
— KFC Big Bash League (@BBL) January 24, 2024
Brisbane are #BBL13 champions! pic.twitter.com/QDrTMY01w8
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |