258 ஓட்டங்களை சேசிங் செய்த ப்ரிஸ்பேன் ஹீட் - BBL தொடரில் புதிய சாதனை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் BBL தொடரின் நேற்றைய போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணிகளும் மோதியது.
BBL வரலாற்றில் அதிக பட்ச சேசிங்
நாணய சுழற்சியில் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக, பின் ஆலன் 79 ஓட்டங்களும், கூப்பர் கோனோலி 77 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனையடுத்து, 258 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 19.5 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 258 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜாக் வைல்டர்முத்(110), மேட் ரென்ஷா(102) ஆகிய இருவரும் சதம் விளாசி BBL வரலாற்றில் புதிய சாதனை படைத்தனர்.

BBL தொடரில் 250+ ஓட்டங்களை சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்தது ப்ரிஸ்பேன் ஹீட் அணி.
இதுவே BBL வரலாற்றில் அதிக பட்ச சேசிங் ஆகும். மேலும், ஒட்டுமொத்த T20 வரலாற்றில் இது 3வது அதிகபட்ச சேசிங் ஆகும்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ஓட்டங்கள் குவித்தே T20 வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |