பிரித்தானியாவில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியேற்றம்
பிரித்தானியாவில் மருத்துவமனை கூரையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மருத்துவமனையில் தீ விபத்து
இன்று பிற்பகல் பிரிஸ்டல் நகர மையத்தில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் மருத்துவமனையின் கூரையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் சவுத்வெல் தெருவில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் தீப்பிடித்ததில் கரும்புகை வெளியேறுவது காணப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கட்டிடத்தின் கூரையில் தீப்பிழம்புகள் தெரிந்தது.
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி பெண்கள்
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர பணியாற்றியபோது, கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சவுத்வெல் தெருவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பதிலளித்ததை உறுதிப்படுத்தினர்.
சுமார் 5:25 மணியளவில், தீ "பாதுகாப்பாக அணைக்கப்பட்டது" என்றும் அதன் காரணம் விசாரிக்கப்படும் என்றும் தீயணைப்பு சேவை அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |