உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற தவளை விஷம்: பிரித்தானியர் உயிரிழந்ததால் பரபரப்பு
உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற, அமேசான் காடுகளில் காணப்படும் விஷத் தவளைகளின் தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்ட பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற தவளை விஷம்
அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை விஷத் தவளையில் தோலிலிருந்து தயாரிக்கப்படும் காம்போ (Kambo) என்னும் மருந்து, தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள Leicesterஐச் சேர்ந்த கிறிஸ்டியன் ட்ரெண்ட் (Kristian Trend, 40) என்பவர், உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக அந்த காம்போ என்னும் மருந்தை உட்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் நிலைகுலைந்து சரிந்த அவர் உயிரிழந்துவிட்டார்.
அவரது மரணம் பிரித்தானியாவில் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், காம்போ மருந்தை பயன்படுத்துவது குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முறையாக அனுமதி பெற்ற தகுதி வாய்ந்த மருத்துவர்களை மட்டுமே நாடுமாறு பிரித்தானிய மாற்று மருத்துவ சிகிச்சை அமைப்பான British Complementary Medicine Association (BCMA) மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |