வெனிசுலாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்... பிரித்தானிய வீரர்களுக்கு புதிய அறிவுறுத்தல்
வெனிசுலாவுடன் போருக்குத் தயாராகும் அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள பிரித்தானிய வீரர்கள், போரில் பங்கேற்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்கும் நிலை
உயர் பயிற்சி பெற்ற ராயல் கடற்படை வீரர்கள் அமெரிக்க போர்க்கப்பலில் தாக்குதல் முன்னெடுக்கும் குழுவில் பரிமாற்ற அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டில் பணியமர்த்தப்பட்டதால், டொனால்ட் ட்ரம்பின் வெனிசுலா திட்டத்தில் பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கடற்படையில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் குழுவிற்கு டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் மதுரோ போதைப்பொருள் கும்பலின் தலைவராக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர், அதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க விரும்புகிறார்கள்.
வெளியான தகவலின் அடிப்படையில், ஜெரால்ட் ஆர் ஃபோர்டு கப்பலில் தாக்குதல் குழுவில் குறைந்தது மூன்று பிரித்தானிய அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
ஏற்கனவே உத்தரவு
இந்தக் கப்பல் பொதுவாக பேரழிவை ஏற்படுத்தும் டோமாஹாக் ஏவுகணைகளை ஏந்தியிருக்கும். வெனிசுலா மீதான ட்ரம்பின் திட்டத்தை வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் ஆதரிப்பதை நிறுத்திவிட்டார்.

வெனிசுலா மீதான தாக்குதல்களில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானிய வீரர்களுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் தாக்குதலுக்கு உத்தரவிட்டால், பிரித்தானிய வீரர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |