ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்து குதித்த பிரித்தானிய பெண்: விடுமுறைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்!
பால்மாவில் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பிரித்தானியா பெண்.
கூட்டாளி என்று நம்பப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணை.
மஜோர்காவில் விடுமுறைக்காக சென்று இருந்த 35 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய பெண்மணி விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மஜோர்கா தீவில் பால்மா நகரத்தின் கடலோர நடைபாதையில் உள்ள நான்கு நட்சத்திர பெல்வர் ஹோட்டலில் விடுமுறைக்காக வந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய பெண்மணி ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
Credit: Melia Hotels
இதனைத் தொடர்ந்து காலை 9:30 மணியளவில் அபாய ஒலி எழுப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் விரைந்து சென்றனர், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் மிகப்பெரிய முயற்சி செய்தும், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.
இதுத் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள சிறப்பு கொலை காவல் பிரிவினர், உயிரிழந்த பெண்மணியுடன் அவரது கூட்டாளி என்று நம்பப்படும் நபர் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உயிரிழந்த பெண்மணி ஹோட்டலின் ஆறாவது மாடியில் இருந்து குதிக்கும் போது அவரும் அந்த அறையில் இருந்தாரா என்ற கோணத்தில் தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பெண் கீழே விழுந்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது, அத்துடன் பிரேத பரிசோதனை நாளை அல்லது செவ்வாய்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: ஊதியம் சரிவர வழங்கப்படாததே ரஷ்ய வீரர்களின் மனசோர்விற்கு காரணம்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்!
இதனைப் போன்றே கடந்த மாதமும் பால்மாவில் உள்ள மற்றொரு ஹோட்டலின் எட்டாவது மாடியில் இருந்து 48 வயதான பிரித்தானிய பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.