ஊதியம் சரிவர வழங்கப்படாததே ரஷ்ய வீரர்களின் மனசோர்விற்கு காரணம்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்!
உக்ரைனில் போரிடும் ரஷ்ய படைகளுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படுவது இல்லை.
ரஷ்ய வீரர்கள் அதிக மனசோர்வில் இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல்.
உக்ரைனில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படைகள் ஊதியப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா ஏழு மாதங்களாக தொடர்ந்து இன்றும் நடத்தி வருகிறது, இதில் கிட்டத்தட்ட 70,000 வீரர்களை ரஷ்ய துருப்பு இழந்தும் உள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 4 September 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) September 4, 2022
Find out more about the UK government's response: https://t.co/d8BWWLuqCF
?? #StandWithUkraine ?? pic.twitter.com/N07M1HoaK5
இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை அறிக்கையில், உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷ்ய படைகள் மன உறுதி மற்றும் ஒழுக்கப் பிரச்சனைகளில் சிக்கி வருவதாகவும், இதற்கு அவர்களது ஊதியப் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவ துருப்புகளுக்கான வருமானம் குறிப்பிட்ட சுமாரான சம்பளத்தை அடிப்படையாக கொண்டது, இவை பல்வேறு போனஸ்கள் மற்றும் கொடுப்பினைகளால் அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் ரஷ்ய படைகளின் ஊதியத்தில் தற்போது கணிசமான போர் போனஸ்கள் வழங்கப்படாமல் இருப்பதால், பெரும்பாலான ரஷ்ய படைகள் மனசோர்வு அடைந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: அயர்லாந்தின் டப்ளினில் வன்முறை: இளம்பெண் உட்பட மூன்று சகோதரிகள் உயிரிழப்பு!
அத்துடன் உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புகளுக்கு பொருத்தமான சீருடை, ஆயுதங்கள், ரேசன்கள் மற்றும் ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட ரஷ்ய ராணுவம் வழங்க தொடர்ந்து தவறி வருவதாக தெரிவித்துள்ளது.