அயர்லாந்தின் டப்ளினில் வன்முறை: இளம்பெண் உட்பட மூன்று சகோதரிகள் உயிரிழப்பு!
டப்ளினில் நடைபெற்ற வன்முறையில் மூன்று சகோதர்கள் உயிரிழப்பு.
20 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
குடியரசு அயர்லாந்தின் டப்ளினில் பகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் சகோதரிகளான கொல்லப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டப்ளினில் (Dublin) உள்ள வீடு நடந்த வன்முறை சம்பவத்தில் இளம்பெண்கள் ஒருவர் மற்றும் அவரது சகோதரிகள் இருவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் க்ரம்ளினில் (Crumlin) உள்ள சில்ட்ரன்ஸ் ஹெல்த் அயர்லாந்து என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும் அவர்கள் உடனடியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
Image: Robbie Kane/Dublin Live
தலைநகர் டப்ளினின் டல்லாட் பகுதியில் உள்ள (Tallaght) ரோஸ்ஃபீல்ட் தோட்டத்தில்(Rossfield Estate) நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்து பலத்த காயத்துடன் டினேஜ் சிறுவன் ஒருவனும், குழந்தைகளின் தாயும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 20 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கார்டா ஆயுத ஆதரவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் மீதும் குற்றவியல் நீதிச் சட்டம் 1984-ன் பிரிவு 4ன் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, டல்லாக்ட் கார்டா நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 14 ஆண்டுகளாக கர்ப்பமாக இருக்கும் தாய்...இதுவரை 16 குழந்தைகள்: ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தம்பதி!
அத்துடன் சம்பவ இடத்தை சுற்றி மூத்த விசாரணை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து சூழ்நிலைகளும் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.