கண் திறந்த கணவர், காணாமல் போன மனைவி! வெளி நாடென்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய பெண்!
கிரீஸ் நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பெண்
கிரீஸ் நாட்டில் 59 வயது மிச்செல் போர்டா என்ற பிரித்தானிய பெண் காணாமல் போன நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டு இருப்பதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் கிளாஸ்கோவை சேர்ந்த 66 வயது கிறிஸ் போர்டா என்பவர் தனது மனைவி மிச்செல் போர்டாவுடன் கடந்த ஆகஸ்ட் 1ம் திகதி இரண்டு வார விடுமுறை கொண்டாட்டத்திற்காக கிரீஸ் நாட்டின் கவாலா நகருக்கு சென்றனர்.
அங்கு ஒப்ரின்யோ கடலில் நீந்தி விட்டு கடற்கரையில் இருவரும் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கணவர் கிறிஸ் கண் திறந்து பார்த்த போது மனைவி மிச்செல் காணவில்லை என்றவுடம் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து ஒருமாத தேடலுக்கு பிறகு மனைவி மிச்செல் கடைசியாகப் பார்க்கப்பட்ட இடத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிடோனிசி தீவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை, இருப்பினும் மிச்செல் அணிந்திருந்த உடைகளின் அடிப்படையில் பொலிஸார் முதற்கட்ட யூகிப்பை செய்துள்ளனர்.
கணவர் கிறிஸ் வழங்கிய தகவலில், மீட்கப்பட்ட சடலம் தன்னுடைய மனைவி உடையது என காவல்துறை தெரிவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |