ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: சமீபத்திய தகவல்
British woman stabbed to death at German train station pictured: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில், இளம்பெண்ணொருவர் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த பொலிசார் Rosenheim என்னும் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்த நிலையில், அங்கு 31 வயதுடைய பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
சமீபத்திய தகவல் இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவரது பெயர், ரெபேக்கா புல்லக் (Rebecca Bullock, 31). ரெபேக்கா, இங்கிலாந்தின் Buckinghamshireஇலுள்ள Whitchurch என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மதுபான விடுதி ஒன்றை நடத்திவந்த ரெபேக்கா, தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் சேவையிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.

ஆஸ்திரியா நாட்டில், தன் அன்பிற்குரியவரை இழந்த தோழி ஒருவருக்கு ஆதரவாக, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ரெபேக்கா சென்றுகொண்டிருக்கும்போதுதான் அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தவரான ரெபேக்காவுக்கு இரங்கல் செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், ரெபேக்கா கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 27 வயது ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |