நிர்வாணமாக ஓடிவந்த நபர்...திகிலடைந்த நின்ற பிரித்தானிய பெண்: போதையில் அரங்கேறிய பகீர் சம்பவம்
பிரேசிலில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அரசு ஊழியர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த உலோகத் தடுப்பு மற்றும் கண்ணாடிப் பலகையை தலையால் மோதிய பிறகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரித்தானிய பெண் அதிர்ச்சி
பிரேசிலின் சால்வடாரில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வருகிறார், இந்நிலையில் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக டிசம்பர் 22ம் திகதி வியாழன் அன்று ஜாக் ஃப்ரீடாஸ் என்ற அரசு ஊழியர் ஒருவர் குடியிருப்பில் உள்ள கண்ணாடிப் பலகையை தன் தலையால் உடைத்து கொண்டு நுழைந்துள்ளார்.
பின் ஃப்ரீடாஸ் குடியிருப்பு வளாகத்திற்குள் இருந்த ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை கடந்து சென்று, திகிலடைந்த பெண்ணை அணுகி தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
CEN
கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நின்று கொண்டு இருந்த அந்த பிரித்தானிய பெண்மணி ஃப்ரீடாஸ் நெருங்கி வர தொடங்கியதும் ஓட முயன்றுள்ளாள்.
பிரித்தானிய பெண் அருகில் வந்ததும் ஃப்ரீடாஸ் அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் முயற்சியில் தனது ஷார்ட்ஸை அகற்றி நிர்வாணமாக அவளை பின் தொடர்ந்து ஓடியுள்ளார்.
இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த உலோகத் தடுப்பு மற்றும் கண்ணாடிப் பலகையை தலையால் மோதியதால், ஜாக் ஃப்ரீடாஸ் தலையில் கடுமையான காயம் மற்றும் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
CEN
பயந்துபோன பிரித்தானிய பெண் தனது குடியிருப்பை விட்டு வெளியேறி, காண்டோவின் வெளிப்புற நீச்சல் குளத்தை நோக்கி ஓடியுள்ளார்.
ஆனால் ஃப்ரீடாஸ் அவளைத் துரத்தியபோது, அதிகமான ரத்த கசிவு தலையில் ஏற்பட்டு அவர் குளத்தின் விளிம்பில் சரிந்தார், அத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
நிர்வாணமாக பிரித்தானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்து, கண்ணாடி பலகையில் தலையை முட்டி இறந்த போன ஜாக் ஃப்ரீடாஸின் சிசிடிவி காட்சிகள் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பத்தின் போது அவர் அதிக போதைப்பொருளில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
CEN