இளைய தலைமுறையினருக்கு விலக்கு... தடை விதிக்க முன்மொழிந்த பிரித்தானியா
இளம் தலைமுறையினர் சிகரெட் வாங்குவதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற பிரித்தானியா அரசாங்கம் புதன்கிழமை முன்மொழிந்துள்ளது.
இளம் தலைமுறையினர் எவரும்
குறித்த முடிவால் பெரும் புகையிலை நிறுவனங்களின் விற்பனை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது. மேலும், உலகின் மிகக் கடுமையான புகைபிடிக்கும் விதிகளை பிரித்தானியா அமுலுக்கு கொண்டுவரும் என்றே கூறப்படுகிறது.
@reuters
சிகரெட் தடை கோரும் இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால், புகைப்பிடிக்கும் குறைந்தபட்ச வயதானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் 2040ல் இளம் தலைமுறையினர் எவரும் புகைப்பிடிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்றே அரசாங்கம் திட்டமிடுகிறது.
சட்டப்பூர்வமாக 14 வயதுடைய ஒருவர் கண்டிப்பாக இன்று சிகரெட் வாங்க முடியாது என குறிப்பிட்ட பிரதமர் ரிஷி சுனக், தமது அரசின் திட்டத்தையும் வெளியிட்டார்.
லாபத்தில் பெரும் பகுதியை
புகைப்பிடிப்பவர்களால் பிரித்தானியாவின் மருத்துவ சேவைக்கு ஆண்டுக்கு 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகிறது என குறிப்பிட்ட ரிஷி சுனக், மின் சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த இருக்கிறது என்றார்.
@reuters
சிகரெட் தடை பிரித்தானியாவில் அமுலுக்கு வந்தால், ஐரோப்பாவிலேயே முதல் நாடாகவும் நியூசிலாந்துக்கு பின்னர் இரண்டாவது நாடாகவும் இருக்கும். மேலும், புகைபிடிக்கும் வயது வரம்பை அதிகரிப்பதால் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே புகைபிடிக்கும் விகிதங்கள் பெருமளவு குறைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த அதிரடி முடிவானது பிரித்தானியாவில் புகையிலை விற்பனையிலிருந்து தங்கள் லாபத்தில் பெரும் பகுதியை உருவாக்கும் நிறுவனங்களை பாதிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |