மேற்கத்திய நாடுகளில் அப்போதே ஊடுருவிய இந்திய உளவுத்துறை: 6 அதிகாரிகளின் ரகசிய வாக்குமூலம்
இந்திய உளவுத்துறைக்கு எதிராக கனடா குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னரே, மேற்கத்திய நாடுகளில் இந்திய உளவுத்துறை அப்போதே ஊடுருவியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க
இந்திய உளவுத்துறை ஊடுருவியுள்ள தகவலை ஓய்வு பெற்ற 4 அதிகாரிகள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் இரண்டு அதிகாரிகள் உட்பட 6 பேர்கள் ரகசியமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
@reuters
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய உளவுத்துறையின் ஒரு பிரிவை மிகவும் உறுதியான சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
166 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட மிக மோசமான அந்த தாக்குதல் சம்பவத்தில், அமெரிக்கர் ஒருவரின் பங்களிப்பு உறுதி செய்யப்பட, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டதை அடுத்தே, இந்தியா அப்படியான ஒரு முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர்.
கனேடியர் படுகொலை தொடர்பில் பதிலளித்த அந்த 6 அதிகாரிகளும், இந்தியாவின் RAW அமைப்பு திட்டமிட்ட கொலைகளை ஒருபோதும் முன்னெடுப்பதில்லை என்றே ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்திய உளவுத்துறையின் பங்கு, கனேடியர் படுகொலையில் இருப்பதாக, கனடாவும் அதன் பங்காளிகளான அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 5 நாடுகள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது
மேலும், கனேடியர் படுகொலைக்கு பின்னர் ஏற்பட்ட விவாதம் காரணமாக RAW அமைப்பானது உலகளாவிய கண்காணிப்பின் கீழ் வரலாம் என இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
@reuters
மட்டுமின்றி, தற்போதைய கனடா விவகாரம் சந்தேகத்திற்கு இடமின்றி RAW அமைப்பானது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றே கூறுகின்றனர். அத்துடன் சீனாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கு நாடுகள் பல இந்தியாவுடன் ராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது என்றே கூறுகின்றனர்.
2020 முதல் அமெரிக்காவும் முக்கியமான மேப்பிங் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் சமீபத்திய கனடாவின் குற்றச்சாட்டுகள் RAW மீதான மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கையை கடினமாக்கலாம் என்கிறார்கள்.
இந்திய மக்கள் அதிகமாக குடியேறியுள்ள நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் RAW அமைப்பு ஊடுருவியுள்ளதாகவே கூறுகின்றனர்.
உலகின் பல நாடுகளில்
ஆனால், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியாற்றும் நாடுகளில் கண்காணிப்பின் கீழ் வருவதற்கான ஆபத்து என்பது, அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தால் அரசியல் செல்வாக்கு பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.
Credit: Sean Kilpatrick
2020ல் கனடா செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அந்த ஆண்டின் பெடரல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீனாவும் இந்தியாவும் தங்கள் மக்களை பயன்படுத்தி யார் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்வதாக குறிப்பிட்டிருந்தது.
இதை கனேடிய உளவுத்துறை தீவிரமாக கண்காணிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், உலகின் பல நாடுகளில் இந்திய உளவுத்துறை ஊடுருவியுள்ளதாகவும், முன்னர் இந்த தேவை தங்களுக்கு இருந்ததில்லை எனவும் சமீபத்தில் ஓய்வு பெற்ற மூத்த ரா அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |