ரஷ்யாவின் கொடிய இராணுவத்தை கண்டு அஞ்ச வேண்டும்: பிரித்தானிய ஜெனரல் எச்சரிக்கை
அதிக கொடிய அச்சமூட்டும் ரஷ்ய இராணுவத்தைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும் என்று பிரித்தானிய ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் ட்ரோன்களின் இருப்பு தீர்ந்துவிடும்
டெய்லி மெயில் ஊடகம், ரஷ்யா நேட்டோ பிரதேசத்தின் மீது படையெடுத்தால், ஒரு வாரத்திற்குள் பிரித்தானியாவிடம் உள்ள ட்ரோன்களின் இருப்பு தீர்ந்துவிடும் என்று கூறியது.
இந்த நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளைப் போல பிரித்தானிய மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை என்பது குறித்து கவலைப்படுவதாக லெப்டினன்ட் ஜெனரல் மைக் எல்விஸ் கூறுகிறார்.
இவர் நேட்டோவின் ஒரு முக்கிய எதிர் தாக்குதல் படைக்குத் தலைமை தாங்கும் பிரித்தானிய ஜெனரல் ஆவார்.
அச்சமூட்டும் எதிரி
பிரித்தானியாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான இவர், ரஷ்யா இராணுவம் தற்போது ஒரு அச்சமூட்டும் எதிரி என்று குறிப்பிடுகிறார்.
மேலும் மைக் எல்விஸ் கூறுகையில், "தற்போதைக்கு ரஷ்யாவின் ஊடுருவலை ARRC கூட்டணியால் தாங்க முடியாது. உக்ரைன் மீது படையெடுத்தபோது இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிக கொடிய அச்சமூட்டும் ரஷ்ய இராணுவத்தைக் கண்டு நாம் அஞ்ச வேண்டும்.
எந்தவொரு எதிரிக்கும் எதிரான போரில் வெற்றிபெற, தற்காப்புப் போரில் செயற்கை நுண்ணறிவும், தொழில்நுட்பமும் இப்போது மிக முக்கியமானவை" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |