கென்ய ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பில் பிரித்தானியர் மரணம்! சாரதி கைது
கென்யாவில் ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பின்போது, பிரித்தானிய நாட்டவர் சாலையைக் கடக்கும்போது உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
வாகன அணிவகுப்பு
Ngong சாலையில் ஜனாதிபதி வில்லியம் ரூடோவின் வாகன அணிவகுப்பு நடந்தது. அப்போது சாலையைக் கடக்கும்போது வாகனம் ஒன்று மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
அவர் பிரித்தானியாவைச் சேர்ந்த எட்கர் சார்லஸ் ஃபிரடெரிக் (79) என்பது பின்னர் தெரிய வந்தது. நகர மையத்திற்கு அருகில் உள்ள பரபரப்பான பகுதியான ஆடம்ஸ் ஆர்கேட் அருகே இது நடந்தது.
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
கென்யாவிற்கு வழக்கமாக வருகை
மேலும், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு அவரது மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை விரைவில் நடத்தப்படும் எனவும் பிபிசி கூறியுள்ளது.
காவல்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "உயிரிழந்த நபர் கென்யாவிற்கு வழக்கமாக வருகை தருபவர் ஆவார். அவர் இங்கு வசிக்கும் அவரது சகோதரி மற்றும் மருமகனைப் பார்க்க வந்திருக்கிறார்" என்றார்.
இதற்கிடையில், மோதலில் ஈடுபட்ட வாகனம் பிராந்திய நிர்வாகத்தைச் சேர்ந்தது என்றும், ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவுக்கு ஆதரவளித்து வருவதாகவும் பொலிஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |