25 வயதில் இரண்டாம் உலகப்போரில் சண்டை: பிரித்தானியாவின் மிக வயதான நபருக்கு.,பிறந்தநாளில் கௌரவம்
பிரித்தானியாவைச் சேர்ந்த முதியவர் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தனது 110வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
40,150 நாட்கள்
டொனால்ட் ரோஸ் என்ற நபர் பிரித்தானியாவின் மிகவும் வயதான மனிதர் என்று அறியப்படுகிறார்.
இவர் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தனது 110வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 40,150 நாட்கள் வாழ்ந்ததற்கு பாராட்டுகளை பெற்ற டொனால்டிற்கு பக்கிங்ஹாம் அரண்மனை பரிசளித்தது. அது மன்னர் சார்லஸ், கமீலா இருக்கும் புகைப்படம் ஆகும்.
மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தி டி-டே டார்லிங்சின் கேட் ஆஷ்பியின் நிகழ்ச்சியில் ஒரு போர்-கருப்பொருள் கொண்ட பார்ட்டி உட்பட பல விடயங்கள் டொனல்டிற்காக உள்ளன.
கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் எரேவாஷின் மேயர் கேட் ஃபென்னெல்லியும் இருந்தார். அவர் டொனால்டை 'ஒரு தேசிய புதையல்' என்று விவரித்தார்.
உலகப்போரில் சண்டை
1914யில் பிறந்த டொனால்ட் ரோஸ், தனது 25 வயதில் இரண்டாம் உலகப்போரில் சண்டையிட கையெழுத்திட்டார். 7வது கவசப் பிரிவுடன் முன் வரிசையில் பணியாற்றினார்.
தனது சேவைப்பணிக்காக பல பதக்கங்களை பெற்ற டொனால்ட், உலகின் மிகவும் மதிப்பு மிக்க பிரான்சின் மிக உயரிய Legion D'Honneurஐயும் பெற்றார்.
76 வயதாகும் டொனால்டின் மகன் டேவிட் கூறுகையில், "அப்பா மிகவும் அற்புதமானவர், அவர் ஒரு சிறந்த தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுத்தாத்தா. அவர் எப்போதும் கடினமாக உழைத்தார். என் அப்பத்தான் நாட்டிலேயே மிகவும் வயதானவர் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |