பாரீஸில் குளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென உயிரிழந்த சம்பவம், அவரது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
குளியலறையிலிருந்து கேட்ட சத்தம்
பிரித்தானிய இளம்பெண்ணான ரியா (Rhea Hourigan, 19), பாரீஸிலுள்ள தன் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருக்கிறார்.
ஒருநாள் ரியா குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது,ஏதோ பலத்த சத்தம் கேட்கவே, அவரது அத்தை ஓடோடிச் சென்று என்ன நடந்தது என்று பார்த்திருக்கிறார்.
அப்போது, குளியலறையில் ரியா சுயநினைவில்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவரது அத்தை உடனடியாக அவசர உதவியை அழைத்திருக்கிறார்.
துயர முடிவு
விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரால் ரியாவைக் காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பால் அந்த அழகிய இளம்பெண்ணின் வாழ்வு முடிந்துவிட்டது.
இதற்கு முன் இதயப் பிரச்சினை எதுவும் இல்லாத ரியாவுக்கு எதனால் மாரடைப்பு ஏற்பட்டது என திகைப்பிலும் துயரத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள் ரியாவின் பெற்றோர்.
ரியாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை இங்கிலாந்திலுள்ள Shirley என்னுமிடத்தில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளார்கள்.