போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை
பிரித்தானியாவின் பல பகுதிகளை கடுங்குளிர் வாட்டி வதைத்துவரும் நிலையில், பிரித்தானியர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரித்தானியர்களுக்கு சில ஆலோசனைகள்
மக்கள் போதுமான உணவுபொருட்களும், தேவையான மருந்துகளும் வீட்டில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு தொண்டு நிறுவனம் ஒன்று ஆலோசனை தெரிவித்துள்ளது.

Credits: hopeforce.org
கடும் குளிர் நேரத்தில் தேவையற்ற, அபாயகரமான பயணங்களை தவிர்க்க முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அந்த தொண்டு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல, NHS அமைப்பு, வித்தியாசமான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது. பனி பொழிந்துள்ள நடைபாதைகளில் நடந்து செல்லும்போது, பெங்குயின்களைப் போல நடந்து செல்லுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

Credits: Getty
குறிப்பாக, முதியவர்கள் இப்படி பெங்குயின்களைப்போல நடந்து செல்வதால், கீழே விழுந்து அடிபடுவதைத் தவிர்க்கலாம் என்பதாலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |