2025வரை இந்த நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுவரை, லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
என்ன காரணம்?
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
இப்படி லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதற்கு என்ன காரணம்?
அதாவது, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கான உதிரி பாகங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கிவருகிறது.
ஆனால், அப்படி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 1,000 விமான எஞ்சின்களின் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை இப்போதைக்கு சரியாகாது என தாங்கள் நம்புவதாகவும், ஆகவேதான் கேட்விக் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் செல்லும் விமானங்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |