புறப்பட்டதும் மேடே அழைப்பு! சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்
அவுஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேடே அழைப்பு
பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA16 விமானம், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்தது.
அப்போது NSWயின் மத்திய டேபிள்லேண்ட்ஸ் பகுதியில் இருந்து ஒரு துயர அழைப்பு விமானத்திற்கு விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விமானி மேடே அழைப்பை விடுத்து மீண்டும் சிட்னிக்கே விமானத்தை திருப்பினார்.
BA16 விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்ததால் திடீரென விமானம் திருப்பப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பாக தரையிறங்கினர்
இதுகுறித்து சிட்னி விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இன்று பிற்பகல் முன்னதாக, சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் BA16 புறப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு சிட்னி விமான நிலையத்திற்கு அவசரமாகத் திரும்பியது" என்றார்.
அதேபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ், "விமானம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது மற்றும் நிலையான நடைமுறைகளின் ஒரு பகுதியாக அவசர சேவைகள் அதை சந்தித்தன. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினர். மேலும் விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு குறித்த அறிக்கைகளுக்குப் பிறகு விமானம் முன்னெச்சரிக்கையாக சிட்னிக்கு திரும்பியது" என உறுதிப்படுத்தியது.
இதுகுறித்தான அறிக்கையில், 'வாடிக்கையாளர்களின் பயணங்களை விரைவில் சரியான பாதையில் கொண்டு வர எங்கள் குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றன' என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |