தரையில் உரசிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வால் பகுதி: பீதியில் உறைந்த பயணிகள்
British Airways Jet Tail Strike at Heathrow Passengers Terrified: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் வால் பகுதி தரையில் உரசியதால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
தரையில் உரசிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் Airbus A321neo ரகத்தை சேர்ந்த BA431 என்ற விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முயற்சித்த போது அதன் வால் பகுதி ஓடுபாதையில் உரசியதால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அச்சத்திற்குள்ளாயினர்.
பிரித்தானியாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தில் காலை 10.30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வழக்கம் போல தரையிறங்கிய முயற்சித்தது. அப்போது விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையை தொட்ட சில நொடிகளிலேயே விமானம் பின்னோக்கி சாய்ந்து அதன் வால் பகுதி தரையில் உரசியது.
தரையை தொட்டு மீண்டும் மேலெழும்பிய விமானத்தின் வால் பகுதி, மீண்டும் இரண்டாவது முறையாக தரையை தொடும் நிலைக்கு சென்றது.
உடனடியாக நிலைமையை சுதாரித்துக் கொண்ட விமானிகள், விமானத்தை உடனடியாக வானில் செலுத்தினர்.
அமெரிக்க வான்வெளி மீண்டும் திறப்பு: இயல்பு நிலை உடனே திரும்பாது! போக்குவரத்துத் துறை செயலாளர் அறிவிப்பு
முதல் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் வட்டமிட்ட பிறகு, மீண்டும் காலை 10.50 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பீதியில் உறைந்த பயணிகள்
விமானத்தின் வால் பகுதி தரையில் உரசும் காட்சிகளை விமானப் போக்குவரத்தை நேரலை செய்யும் Big Jet TV என்ற பிரபல யூடியூப் சேனல் நேரலை செய்த நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த திகிலூட்டும் காட்சியை நேரலையில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த அபாயகரமான சம்பத்தின் போது விமானத்திற்குள் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பீதியில் அலறியதாக The Sun ஊடகத்திடம் பேசிய தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தது என்றும், பயணிகள் பீதியில் அலறினர். என்ன நடக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.
BA431 விமானம் 20 நிமிடங்களுக்கு பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதை Flightradar24 இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு(AAIB) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.