பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி கடத்தல்: பணம் கேட்டு சித்திரவதை செய்த மர்ம கும்பல்
விமான இடை நிறுத்தத்தின் போது ஷாப்பிங் சென்ற பிரிட்டிஷ் விமானியை கடத்தி கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட பிரிட்டிஷ் விமானி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) இடைநிறுத்தத்திற்காக விமானம் நிறுத்தப்பட்ட போது ஷாப்பிங் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி(British Airways pilot) ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மெல்ரோஸ் ஆர்ச் வளாகத்தின் வடக்கில் உள்ள புளூபேர்ட் என்ற பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்ய சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி கடத்தப்பட்டு தென்னாப்பிரிக்காவின் தொலைதூர பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
Markus Mainka / Shutterstock.com
விமான நிறுவனத்தின் முதல் அதிகாரி என அழைக்கப்படும் அந்த நபர், பல்பொருள் அங்காடியின் கார் பார்க்கிங்கில் பெண் ஒருவர் உதவி கேட்டதை தொடர்ந்து அவருக்கு எடுத்து கொடுப்பதற்காக சென்ற போது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அத்துடன் 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரை அடித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக ஆயிரக்கணக்கான பவுண்டுகளை பறித்துள்ளனர்.
Reuters
இதற்கிடையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த விமானம் மாற்று விமானி மூலமாக லண்டனுக்கு திரும்பியுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட விமானி கடத்தல் கும்பலிடம் இருந்து உயிருடன் தப்பித்ததில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சக விமானிக்கு ஏற்பட்டுள்ள நிலையை அறிந்து விமான குழு அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர், பனிப்பொழிவு: -15C வெப்ப நிலைக்கு செல்ல வாய்ப்பு
விசாரணைக்கு ஒத்துழைப்பு
இந்நிலையில் தங்கள் விமான குழுவில் உள்ள நபர் ஒருவர் கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பான உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
AFP via Getty Images
குற்ற வழக்குகள் அதிகமாக பதிவாகும் தென்னாப்பிரிக்க நகரங்களில் இருக்கும் போது விமானிகள் தங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விதிமுறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
British Airways pilot, kidnapped, shopping trip, flight stopover, flight, Johannesburg, United Kingdom, Uk, supermarket, Car Parking, South Africa, crime hotspot city, crime hotspot,