சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்: 5 மாத பிரித்தானிய குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!
ஸ்பானிஷ் தீவில் நடந்த விபத்தில் 5 மாத பிரித்தானிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய பிரித்தானிய குடும்பம்
ஸ்பானிஷ் தீவான லான்சரோட்(Lanzarote) பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு மத்தியில் கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியதில் 5 மாத பிரித்தானிய குழந்தை உயிரிழந்துள்ளது.
அத்துடன் குழந்தையின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி என அனைவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை மாலை பிளாயா பிளாங்காவின் தெற்கு விடுமுறை விடுதியில் உள்ள Aqualava water park-ல் கார் ஏறி நிற்பதற்கு முன்னதாக இரண்டு கார்கள் இடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய சாரதி
இந்நிலையில் அறிக்கைகளின் அடிப்படையில், ஸ்பெயின் தீவில் வசிக்கும் 23 வயது பிரித்தானிய பெண் சாரதி, விபத்தை ஏற்படுத்திய போது போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தி இருந்ததாக தெரியவந்துள்ளது.
குழந்தையின் உயிரிழப்பை தொடர்ந்து உள்ளூர் அரசாங்கம் இரண்டு நாள் இரங்கல் அஞ்சலியை அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |