எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம்
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி ஒன்று தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வெளிவிவகார அலுவலகத்தின் எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இரக்க குணம் கொண்டவர்கள்
போர் சூழல் மிகுந்த ஈரான் நாட்டில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள அந்த தம்பதி திட்டமிட்டிருந்துள்ளது. பிரித்தானியர்களான கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதியே ஈரானில் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் எங்கும் பெரும்பாலான மக்கள் நல்லவர்கள் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள் என குறிப்பிட்டே கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதி ஈரானுக்கு பயணப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ன் திகதி ஆர்மீனியாவிலிருந்து ஈரானுக்குள் நுழைந்துள்ளனர். பயணத்தின் இடையே தப்ரிஸ், தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் பகுதியில் உள்ள ஹொட்டல்களில் தங்கியுள்ளனர்.
ஆனால் கெர்மானில் உள்ள அவர்களின் அடுத்த ஹொட்டலை அடையவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானுக்கு எந்தப் பயணமும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது, ஈரானில் பயணிகள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பிரித்தானியாவுடன் தொடர்பு வைத்திருந்தால் கூட கைது செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஜனவரி மாதம் கைது
தற்போது கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதி குறிப்பிடப்படாத பாதுகாப்பு குற்றச்சாட்டுகளின் பேரில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இன்று, அந்தத் தம்பதியினரின் குடும்பத்தினர் உதவி கோரி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்களின் கைது குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி 3ம் திகதி அந்த தம்பதி பதிவிட்ட புகைப்படம் ஒன்றில், ஈரானில் மத தலைவர் ஒருவரை சந்தித்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் அவர்களிடம் இருந்து இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |