பிரிட்டிஷ் கார் பந்தய வீரரை கரம்பிடித்த மலேசிய இளவரசி
பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான கிறிஸ் ப்ரொக்கட் மலேசிய ராஜ குடும்ப இளவரசியான தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா ஆலியா-வை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கோலாலம்பூரில் ராஜ குடும்ப திருமணம்
கோலாலம்பூரின் உலக புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி-லாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரிட்டிஷ் கார் பந்தய வீரரான கிறிஸ் ப்ரொக்கட்(Chris Froggatt) மலேசிய ராஜ குடும்ப இளவரசியான தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா ஆலியா-வை(Princess Tengku Puteri Raja Tengku Puteri Ilyana Alia) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண விழாவில் இளவரசி இலியானா ஆலியாவின் தந்தை பகாங் சுல்தான், மலேசியாவின் முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துத்தீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பகாங் மாகாணத்தின் முடிசூட்டு இளவரசர் தெங்கு ஹசனால் இப்ராஹிம் அலாம் ஷா மற்றும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பிரம்மாண்ட திருமணமானது, இஸ்லாமிய முறைப்படி பாரம்பரிய மலாய் ராஜ மரபுகளுடன் அழகாக நடைபெற்றுள்ளது.
தம்பதிகள் திருமண மோதிரத்தை மாற்றிக் கொண்டவுடன், பாரம்பரிய இஸ்லாமிய திருமண பரிசான Mas Kahwin வழங்கும் சம்பிரதாயத்தையும் நிறைவு செய்தனர்.

அத்துடன் திருமண தம்பதிகளை ஆசிர்வதிக்கும் விதமாக மெரெஞ்சிஸ்(Merenjis) என்ற புனித நீர் தெளிக்கும் சடங்கும் நடத்தப்பட்டது.
ராஜ குடும்பத்தின் வாழ்த்து மடல்
இளவரசி தேங்கு புத்தேரி ராஜா தேங்கு புத்தேரி இலியானா மற்றும் கிறிஸ்டோபர் லியோனல் ஆகிய இருவரும் திருமணம் என்னும் கப்பலில் பயணித்து அன்பு, அமைதி மற்றும் கருணை(சக்கீனா, மவத்தா வ ரஹ்மா) என்ற குடும்பத்தை உருவாக்கி மகிழ்ச்சி அருள், மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாக பகாங் ராஜ குடும்பம் வெளியிட்ட திருமண வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவின் சுழற்சி முறை மன்னராட்சியின் படி 2019ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக மலேசியாவின் 16வது மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் அப்துல்லாவின் மகள் தான் இளவரசி இலியானா என்பது குறிப்பிடத்தக்கது.
32 வயதுடைய மணமகன் கிறிஸ்டோபர் லியோனல் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களின் பந்தய பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிகரமான வாழ்க்கையை கட்டமைத்தவர் ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள். |