பிரான்ஸ் கடற்கரையில் பாய்ந்த 3 லட்சம் யூரோ லம்போர்கினி கார்! பிரித்தானிய சுற்றுலா பயணி கைது
பிரான்ஸ் லெ டூகெட்(Le Touquet) கடற்கரையில் 3 லட்சம் யூரோ மதிப்பிலான லேம்போர்கினி காரில் சுற்றித்திரிந்த பிரித்தானிய சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி கைது
பிரபல பிரெஞ்சு கடற்கரை ஓய்வுத் தலமான லெ டூகெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் €3 லட்சம் மதிப்புள்ள அவரது லம்போர்கினி காரை நேரடியாக மணல் கடற்கரையில் ஓட்டிச் சென்றதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
கடற்கரையில் படகு இறங்குவதற்கான சாய்வான பாதை வழியாக இந்த உயர்தர 4x4 லேம்போர்கினி கடற்கரைக்குள் சென்றதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் சம்பவத்தால் கடற்கரையில் இருந்த குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர் கடற்கரையில் சொகுசு வாகனத்தில் சுற்றுலா செல்வது ஆடம்பரத்தின் உச்சகட்டமாக இருந்தாலும், பிரான்ஸ் அதிகாரிகள் இதற்கு சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை.
லெ டூகெட்டில்(Le Touquet) கடற்கரைகளில் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இது மணல் சார்ந்த சுற்றுச்சூழலை சேதப்படுத்துவதுடன், கடற்கரைக்கு வரும் மக்களை பாதிக்கும்.
வெளியாகாத விவரம்
கைது செய்யப்பட்டுள்ள 35 வயதான பிரித்தானிய நபரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவருக்கு € 1,500 அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறியது மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
மணல் கடற்கரையில் ஓட்டியதால் லேம்போர்கினிக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவும் இன்னும் தெளிவாக இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |