பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு
பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
கென்ட் மாகாணத்தின் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த 35 வயது லாரென் எவன்ஸ். முன்னாள் காவலரான இவர், ப்ரோம்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2023-யில் தனது பணிக்கு தாமதமாக சென்ற எவன்ஸ், சக ஊழியர்களிடம் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.
காரில் வந்த காவலர் அலெக்ஸ் வாட்ஸன், தன்னை தடுத்து நிறுத்தி தனது உடலை அந்தரங்கமாக சோதனையிட்டதாக உணர்ச்சிப்பூர்வமாக எவன்ஸ் விவரித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவலர் அலெக்ஸ் வாட்ஸன், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் 23 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட CCTV மற்றும் ANPR பகுப்பாய்வுகளில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பதும், அவரது வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறை தண்டனை
அதே சமயம் லாரென் எவன்ஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதி நடவடிக்கையைத் திசை திருப்பிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.
பணிக்கு தாமதமாக வந்ததை மறைக்க அவர் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு கூறியது தெரிய வந்ததைத் தொடர்ந்து, லாரென் எவன்ஸுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், லாரென் எவன்ஸின் தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'அளவுக்கு மீறிய மென்மையான தண்டனை' திட்டத்தின் கீழ் மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அவரது தண்டனையை அதிகரித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |